kavithaigal


   
                                 
                                    கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு     

வா.. வின் ஓவியம்

          அதிரை     வாசி,
     அதிகம்     வாசி!
     அறிவை    நேசி!
     ஆழ்ந்து     யோசி!
     அளந்து     பேசி,
     அடக்கம்    நேசி!
     அறிவாய்   உனக்குத்  
     துன்பம்     தூசி!
                
                  உமர்தம்பிஅண்ணன்  


                                கற்பவனாக இரு / கற்பிப்பவனாகஇரு     

  வா.. வின் ஓவியம்


பகுத்தறிவு முஸ்லிமின் பார்வையில் பாழாய்ப்போன டி.வி.
    
      
         டி.வி.  உடையோரே !
    டி.வி. யை  உடையுங்கள் !
    தரித்திரம்  விடை  பெற,
    சரித்திரம்  படை யுங்கள் !
    நுண்மதி உடைய  சான்றோர்,
    நிம்மதி  அடையட்டும் ! 

                                  உமர்தம்பிஅண்ணன்                                     

                                    கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு     


 வா.. வின் ஓவியம்
     

          த்தமர்தம்பி
ஓரிரண்டு   வயதில்  அம்மாவை  இழுத்து  வந்து,
     அமர  வைத்துப்  பால்  உண்டாய்!
 ஈறைந்து  வயதில்  அண்ணனைக்  கூட்டி  வந்து
     உன்  உணர்வுக்குத்  தீனி  போட்டாய்!
ஆறைந்து  வயதுக்குப்  பின்,  அறிவின்
     ஊற்றாய்த்  திகழ்ந்  திருந்தாய்!
குரல்  வெளி  வரும்போதே  உன்னிடமிருந்து
     குறளும்  சேர்ந்தே  வந்தது!
ஆறாவதில்  அமர்ந்து  கொண்டு,  ஏழாவதின்
     அறிவியல்  பாடம்  கற்றாய்!
படிப்பில்  மார்க்  கோணிய  பின்னரும்
     மார்க்கோனியை  முந்த   முயன்றாய்!
உயிரியலைக்  கற்று  உணர்வுக்குப் 
     புத்துயிர்  அளித்து  நின்றாய்!
சர்க்கரையாகப்  பிறருடன்  பேசிய  நீ,
     சர்க்கரையால்  கரைந்து  போனாய்!
தென்றலாய்த்  தவழ்ந்து  வந்த  நீ,
     இனிப்புப்  புயலால்  அலைக்கழிந்தாய்!
தெரிந்திருந்தும்  தேனீயை  நீ                                  
     ஏனப்பா  தேர்ந்  தெடுத்தாய்?
தகாதோரை  தேனீயாய்க்  கொட்டினாய்!
     தமிழ்மீது  ஏன்  தேனைக்  கொட்டினாய்?
தொட்டிலி  லிருந்து  நெட்டு  வரை
     என்னுடன்  வாழ்ந்  திருந்தாய்!
என்னைத்  தனி  மரமாய்  விட்டுவிட்டு
     ஏன்  தம்பி  நீ  மட்டும்   மறைந்து  போனாய்?
        
                                                       உமர்தம்பிஅண்ணன்   
                                     கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு     

வா.. வின் ஓவியம்

கருணாநிதி:
பட மெடுத்தீர்! தமிழ்த்திரு  
நாட்டைத் தீண்டி விட்டீர்! 
மின்சாரத்தைத் துண்டித்தீர்! மக்கள்
உம்மைத் தண்டித்து விட்டனர்!
மின்சாரம் இல்லாமலேயே ஷாக்
ட்ரீட்மென்ட் தந்து விட்டனர்!

ஜெயலலிதா
மதுரைக்கே வேட்டு வைத்த 
கண்ணகிக்கு வேட்டு வைத்தீர்!
கற்பில் நிலைத்து நின்றவளுக்கே
இக் கதிதான் உண்டு என்றால்
பொறுப்பில் உள்ளோர் கதி  
யாதா குமோ யாரறிவார்?

விஜயகாந்த்:
கொட்டு முரசே! தனிக்காட்டு ராஜ்யம்
நமதென்று கொட்டு முரசே!
பாட்டில் அடிக்காமல் எழுத முடியாது!
பாட்டில் அடிக்காமல் பேச முடியாது!
பாலாறு, தேனாறு ஓடுதோ இல்லையோ,
கோளாறு செய்யும் மது ஆறு ஓடும்!   

வைக்கோ :
அம்மாவால் சைக்கோ ஆகுமுன்,
வைக்கோ, இடம் மாற நினைத்தீர்!
நல்ல வேளை தப்பித்தீர்; மாறினால்
உமது நிலைமை என்னவாகும்?
மறு தளர்ச்சி வேண்டாம்; மீண்டும்
புது மறுமலர்ச்சி மலரட்டும்! 

தா. பாண்டியன்:
சொந்த அரிவாள் அதனால் 
கதிர் அறுக்க முடிய வில்லை!
சொந்த அறிவாலும் அறுவடை
நடத்தத் துணிவில்லை; உமது
கூரிய அறிவாள் செங்கோல்
என்றுதான் நிமிர்ந்து நிற்கும்! 
   
ராமதாஸ்:  
அரசியலில் மகா மருத்துவர் நீர்!
உமது ட்ரீட்மென்ட் என்ன ஆச்சு?
எக்ஸ்ரே, ஸ்கேனிங் எல்லாம்
மிகவும் பழுதாகிப் போயினவோ?
புதிதாக வாங்கி வைக்க,
அய்யாவுக்கு ஐடியா உண்டா! 

தங்கபாலு:
வெளியேறி யவரோ கராத்தேக்காரர்!  
சகாக்களுடன் செய்தீர் கராத்தே!
என்ன சொன்னாலும் உமக்கு வராதே!
பொற்கைப் பாண்டியனின் கை,
ஜோஷ்யக் கையாய்ப் போனதேனோ?
விதி ரேகை சொல்லுமா விளக்கம்?     
                        உமர்தம்பிஅண்ணன்                                       கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு     

வா.. வின் ஓவியம்

             ஹாஜி S.M.S.ஷேக்ஜலாலுதீன்
            செயலாளர், தாளாளர்; M.K.N. மதரசா

சுறு சுறுப்பு, சமயோஜிதம்;
கண்டிப்பு, கல கலப்பு;
நகைச் சுவை, நறுக்கென்ற பேச்சு;
காண வருவோரை கண்களால் அளத்தல்;
சோர்விலாச் சொல்லால் சொக்க வைத்தல்;
நயம்படப் பேசுதல்; எதிர்வாதத்தை
நொறுக்குகின்ற சொற்கள்; பணியாளருக்கு
முறுக் கேற்றுகின்ற ஊக்கம்;
அவர் திட்டினால் அறிவுரை;
குட்டினால் அது அனுபவம்!
இவ்வளவுக்கும் உரிமையாளர், தன்
காலால் நின்ற எங்கள் தாளாளர்!
மடிக் கணினிக்கு முன்பே மடியில்
தட்டச்சை வைத்துத் தட்டியவர்!           
எத்தனை பேருக்கு ஓலை தந்தார்!
வேலை பெற உதவி செய்தார்!  
பட்டறிவில் பண்பட்ட பண்டிதர்! 
ஆங்கிலத்தில் ஆளும் துறை!
கோட்டுகளும் சூட்டுகளும்
இவரிடம் குட்டுப்படும்!
இவர் ஒன்றை எழுதிவிட்டால் அதை
அடித்து எழுதுவோர் யார் உளர்?
பிறர் எழுதியதை அவர் திருத்தினால்
அததைத் தடுப்பவர் யாருமில்லை!
இவரை எதிர்த்துப் பேச முடியாமல்
மறத்துப் போனவர் பலர்! பிறர்
பேச்சை மறுத்துப் பேசினால்,
பொறுத்துப் போயினர் பலர்!
சுருங்கப் பேசி விளங்க வைப்பவர்;
எஸ்.எம்.எஸ்.ன் பொருளே அதுதானே!
தமது வீட்டில் ஓர் உடை,
அலுவலகத்தில் ஓர் உடை,
விழாவுக்கு ஓர் உடை,
பிரமுகரைச் சந்திக்க ஓர் உடை
என்றெல்லாம் இவரிடம் கிடையாது!
எல்லாம் உடையார்க்கு, உடையா தேவை?
பயப்படாதவருக்கு படையா தேவை?
எம் தாளாளருக்கு நடையே போதும்!    
பின் வருவோருக்குப் பின்னடைவுதான்!
நீட்டோலை வாசியா நின்றவரை,
ஏட்டோடு பள்ளி வரச்செய்தார்!
படிப்பின்றி வீட்டோடு இருந்தோரை
பள்ளியில் சேர்த்துப் புள்ளியாக்கினார்.
மழுங்கிப்போன எம் போன்றோரை,
திட்டியும் தீட்டியும் கூர்மையாக்கினார்!
சோம்பேறி என்று திட்டியே என்னை
முதுகலைப் பட்டம் பெற வைத்தார்!
ஆசிரியப் பணி தந்து ஆசீர்வதித்தார்!
எழுத்தர் பணி முதல் தலைமை
ஆசிரியர் பதவி நெருங்கும் வரை
அவர் தயவில் எம்முயர்வு இருந்தது!
அவர் சொற்களுக்குப் பணிந்து, அயல்
நாட்டிலிருந்தே பணி துறந்தேன்!
எப்படியோ, அவர் நல்லெண்ணத்தால் 
நன்றாகவே நான் இருக்கிறேன்!
பரவட்டும் தாளாளர் புகழ் தாராளமாக!
கிட்டட்டும் இறைவன் அருள் ஏராளமாக!
உலகப் பதவியைப் பலருக்கு வழங்கியவருக்கு
சுவனப் பதவியை இறைவன் வழங்கட்டும்!
உமர்தம்பிஅண்ணன்  


                                     கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு     

வா.. வின் ஓவியம்

          புங்கைப்பூக்கள்
மாலையில் இல்லாமல்,
காலையில் விழுகிறோம்!
சோலையில் இடமின்றி,
சாலையில் கிடக்கிறோம்!
வெள்ளைக் கம்பலமாய்,
விடியலில் விரிகிரோம்!
நாங்கள் கூளங்கள் அல்ல,
இயற்கையின் கோலங்கள்!
பூவாய்ப் பிறந்த எங்களை  
வா.. பாவாய்ப் படைக்கிறார்!
எம்மைத் தழுவிய காற்று,
உம்மை ஆரத் தழுவட்டும்!         
நோய்கள் தழுவாது மக்கள்,
மிக்க நலமுடன் வாழட்டும்!          

உமர்தம்பிஅண்ணன் 

                                     கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு     
வா.. வின் ஓவியம்
சீறப்படும் சமச்சீர் புத்தகங்கள் !   
கல்வி அமைச்சகம் கீழ்
பல பாடத் திட்டங்கள்;
‘மாணவர் ஒரே நிலை;
கல்வியும் ஒரே நிலை!’
என்ற சீரிய நோக்கின்
விளைவே சமச்சீர் கல்வி!
எல்லாத் தரப்பிலும்
ஏகபோக வரவேற்பு!
புது நூல்கள் அச்சாகி,
பள்ளிகளுக்கு வந்தன.    
வந்ததோ வந்தது தேர்தல்!
ஆட்சி மாற்றமும் வந்தது!
மீண்டும் அம்மாவின் எழுச்சி!
கலைஞர் திட்டமோ வீழ்ச்சி!
‘சமச்சீர் கல்வி வேண்டும்,
பாடங்கள் மாற வேண்டும;’
இது புதிய அரசின் கொள்கை!
மீண்டும் பழைய புத்தகங்கள்    
மாணவர்க்கு வழங்கப்படும்.   
விலைவாசி உயர்வால் மக்கள்
வாங்கிய அடிகளின் அத்தனை
வரிகளும் மக்களின் முதுகில்!
பத்தாம் வகுப்பு நூல்களின்
நகல் எடுத்துப் பகல் முதுழும்
பாடம் நடத்தின பல பள்ளிகள்!
விழலுக்கு இறைத்த நீராயிற்று!
பாடங்களின் வழிகாட்டி நூல்களை      
மாணவர் தந்து உதவிக் கொள்வர்.
அவ்வளவு நூல்களும் கடைகளில்
சங்கமமாகி, சுருள்களாயிப் போயின!
வழிகாட்டி நூல்கள் வெளியாகவில்லை;
விரைவில் கிடைப்பது குதிரை கொம்பே!
மாணவர், பெற்றோர், ஆசிரியர் அவதி;
கண்ணான கல்வியோ கரை காணா அகதி!
இது அரசின் முழு மூச்சு முழக்கம்:
‘தீண்டாமை ஒரு பாவச்செயல்;
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்;   
தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்.’
பழைய அரசின் திட்டங்களைத் தீண்டாமை
பாவச்செயல், பெரும் குற்றம் அல்லவா!    
புத்தகம், சட்டசபை பழையது மேல் எனில்   
பழைய ஆட்சியே மேல் என மக்கள்
சிந்திக்க  மாட்டார்களா என்ன! 

உமர்தம்பிஅண்ணன்


இலவசம் யார் வசம்?

கல்வி, புத்தகம் இலவசம்;
உணவு, சீருடை இலவசம்;
லேப்டாப், சைக்கிள் இலவசம்;
கல்வியின் உயிர் யார் வசம்?

விவசாய மின்சாரம் இலவசம்;
சமையல் எரிவாயு இலவசம்;
தொலைக் காட்சியும் இலவசம்;
2-ஜி மெகா ஊழல் யார் வசம்?

அரிசி இருபது கிலோ இலவசம்;
ஆடுகள், மாடுகள் இலவசம்;
மிக்சி, கிரைண்டர் இலவசம்;
சொத்துக் குவிப்பு யார் வசம்?

வேட்டி, சேலை இலவசம்;
திருமண உதவி இலவசம்;
தங்கத் தாலி இலவசம்;
குடும்ப அரசியல் யார் வசம்?

உமர்தம்பிஅண்ணன்


powered by Blogger