
10:24 PM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
2 Comments

இன்றைய நாளில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக விளங்கி வரும் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவான விதம் பற்றித் தெரிந்து கொண்டால்தான் தாளாளர் அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதிராம்பட்டினத்து மக்களின் குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மேலத் தெருவில் அமைந்துள்ள குடி நீர்த் தொட்டியைத் திறந்து வைப்பதற்காக அப்போதைய தமிழக முதல்வர் M.G.R. அவர்கள் அதிரைக்கு வருகை தந்தார். அப்போது அவரிடம் ‘பெண்களுக்காகத் தனியாக உயர் நிலைப் பள்ளி வேண்டும்’...

11:41 AM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
4 Comments

சமுதாய அரசியலா, $UM ஆதாய அரசியலா?ஒரு கணிஞனின் கணிப்புடன், ஒரு கலைஞனின் கருத்துரை!உமர் பல இயல்களைக் கற்றிருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் துவக்க ஆசிரியன் நான்தான்! சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல் அரசியல்தான்! மனிதன் படைக்கப்பட்டபோதே ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் அரசியல் துவங்கிவிட்டது! உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது! ஆன்மீகவாத அரசியல்வாதிகள் அவனைத் துரத்தி, அடித்து, விரட்டிக் கொண்டிருந்தார்கள்!...

10:06 PM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
1 Comment

மறக்க முடியா மனிதர் ‘Short Message Service’ என்பதன் சுருக்கமான ‘S.M.S.’ என்ற வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்பத்தின் பயனாக உலகளாவிய ஒரு வழக்காகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் ‘S.M.S.’ என்ற மந்திரச்சொல் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனதில் – குறிப்பாகக் கற்றோர் நெஞ்சங்களில் நிறைந்து நிற்கிறது! ‘S.M.S.’ என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டவரும், எங்களால் ‘பெரியவர்’ என மரியாதையோடு அழைக்கப்பட்டவருமான ‘அதிரையின்...

10:02 PM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
2 Comments

ஊரின் தேவைகளும் உமரின் சேவைகளும்உமர் படிக்கும் காலங்களில் பல பொழுது போக்குகளில் ஈடுபட்டிருந்தார். முதலில் அவரது கவனம் ரேடியோவின் பக்கம்தான் திரும்பியது. பத்திரிகைகளில் வரும் ‘ரேடியோ செய்வது எப்படி?’ என்ற கட்டுரையைப் படித்து, டிரான்சிஸ்டர் உதிரி பாகங்களை கடையிலிருந்து வாங்கி சிறிய சாக்பீஸ் பெட்டியில் ரேடியோ செய்தார். அதில் வெற்றியும் கண்டார். படிப்பில் கவனமில்லையே என்று நாங்கள் முனுமுனுத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் வாசலில் அவரது ரேடியோ முனுமுனுத்துக் கொண்டிருக்கும்.எல்லா அலை வரிசைகளும் எடுக்கூடிய...

7:19 AM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
4 Comments

மர்ஹூம் ஹாஜி S.M.S.ஷேக்ஜலாலுதீன்செயலாளர், தாளாளர்; M.K.N. மதரசாமறைவு: 02-10-1986 சுருக்கமாகப் பேசுகின்ற எஸ்.எம்.எஸ்.,சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்!உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்!சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;மசியாத மனிதரை மசிய வைப்பார்!திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்குட்டினால் அனுபவம்! இவைகளின்சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்சொந்தக்காலில் நின்ற செயலாளர்!மடிக் கணினி வருமுன்னரேமடியில் வைத்துத்...