
12:52 PM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
135 Comments

1958 – ல் நான் துணை விடுதிக் காப்பாளனாகப் பொறுப்பேற்ற போதுதான், விடுதி வரவு - செலவுகளைக் கண்காணிக்கவும், கணக்கு எழுதவும் தனியாகக் கணக்கர் நியமிக்கப் பட்டார். எனது உடன் பிறவாச் சகோதரர் முகம்மது பாரூக்தான் விடுதியின் முதல் தனிக் கணக்கர். அப்போது, “இச் சீட்டு கொண்டு வருபவரிடம், கல்லூரிச் செல்வுக்கு ருபாய் ............. கொடுத்தனுப்பிக் கணக்கில் எழுதிக் கொள்ளவும்” என்று தாளாளர் ‘ரோக்கா’ (ஆணைச்சீட்டு) அனுப்புவார்.
இரும்புப் பெட்டியில் பணம் இருந்தாலும், விடுதிப் பணத்தைக் கல்லூரிச் செலவுக்குப்...

11:58 PM

Vavanna (உமர்தம்பிஅண்ணன்)
,
8 Comments

பகுதி - 2
பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்து விட்டேன்! மன்னியுங்கள்! மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம்!
காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது! “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி?”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம்! எனைவிட பதின் மூன்று வயது மூத்தவர், என்றாலும் என்னினும் இளமையாகத்...