மூன்று வியப்புகள்!!! பகுதி - 3


1958 – ல் நான் துணை விடுதிக் காப்பாளனாகப் பொறுப்பேற்ற போதுதான், விடுதி வரவு - செலவுகளைக் கண்காணிக்கவும், கணக்கு எழுதவும் தனியாகக் கணக்கர் நியமிக்கப் பட்டார். எனது உடன் பிறவாச் சகோதரர் முகம்மது பாரூக்தான் விடுதியின் முதல் தனிக் கணக்கர். அப்போது, “இச் சீட்டு கொண்டு வருபவரிடம், கல்லூரிச் செல்வுக்கு ருபாய் ............. கொடுத்தனுப்பிக் கணக்கில் எழுதிக் கொள்ளவும்” என்று தாளாளர் ‘ரோக்கா’ (ஆணைச்சீட்டு) அனுப்புவார். 

இரும்புப் பெட்டியில் பணம் இருந்தாலும், விடுதிப் பணத்தைக் கல்லூரிச் செலவுக்குப் பயன் படுத்துவதை ஒப்பாமல், “பணம் கிடையாது” என்று அதே ரோக்காவின் பின் பக்கத்தில் எழுதித் திருப்பி அனுப்பிவிடுவேன்! இதனை மேlல் அதிகாரிகளுக்குக் கீழ்ப் படியாமை (insubordination) என்று நினைவூட்டுவார், சகோதரர் பாரூக். குற்றமோ இல்லையோ, தாளாளர் இதுக்காக என்னைக் கண்டித்ததும்  இல்லை; தண்டித்ததும் இல்லை! “முதல்வர் தனக்கோடி, இரும்புப் பெட்டிக்கு, சரியான பூதத்தைக் காவலாகப் போட்டிருக்கிறார்!” என்று மட்டும் சொல்வார்!

நிறுவனங்களின் வரவு செலவுக் கணக்கைக் கடுமையாகக் கண்காணிப்பார்! அவர் அறியாமல் யாரும் எதையும் சுருட்டிவிட முடியாது! யார் என்ன செய்கிறார்கள்; என்ன பேசுகிறார்கள் என்ற செய்திகளெல்லாம் அவர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும்!



அவரோடு பழகியவர்கள் பலர், “நாம் வயைத் திறப்பதற்கு முன்பே நம் மனத்தில் உள்ளதை, உள்ளபடி எப்படிச் சொல்லி விடுகிறார்?” என்று வியப்பார்கள்! ‘தாளாளருக்குக் குறிப்பு உணரும் கூர்த்த அறிவு உண்டு’ என்பது உண்மையே! ஆனாலும், இதில் மாயம், மர்மம், மந்திரம், தந்திரம் ஏதும் இல்லை! அவரது தந்தை ஜனாப் அபுல் ஹசன் மரைக்காயர், நகரத் தந்தையாகப் பதவி வகித்த காலத்திலேயே ஊர் நடப்புகளையும் பழகியவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து கொள்வதில் அவருக்குத் தனிச் சுவை இருந்தது!

“எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் 
வல்லரிதல் வேந்தன் தொழில்”

என்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ப ‘வேந்தன் தொழிலை’க் குறுகிய வட்டாரத்தில் திறம்படச் செய்து வந்தார்! ஆனால் ஷேக்ஸ்பியர் சொல்லியது போல, எல்லாருக்கும் காதுகளைத்தான் கொடுப்பாரே ஒழிய,முடிவு அவருடையதாக்வே இருக்கும்!

1966 – ஆம் ஆண்டு என்னைப் பொறுப்பாள ராகப் போட்டுக் கல்லூரிச் சிற்றுண்டி விடுதியை (Canteen) ஆரம்பித்தார். நான் வகுப்ப்க்குப் போகும் வேளைகளில் என் தம்பி பொன்னுசாமியும், பழைய மாணவர் இருளப்பனும் கண்காணிப்பார்கள். அவர்கள் இலவசமாகத் தேநீர் குடிக்கிறார்கள். அவகக் சிற்றுண்டியும் சாப்பிடுகிறார்கள் என்று தாலா ல்ரின் காதில் ஓதிவ்ட்டார்கள். அவர் கூப்பிட்டுக்கேட்டார். நான் அன்றாடக் கணக்குத் தாள்களை அவரிடம் காட்டினேன்! அதில் த.ஜெ. (பொ) பற்று, த.ஜெ. (இ) பற்று என்று போட்டிருப்பது, என் தம்பியும் இருளப்பனும் சாப்பிட்டதற்கான பற்று விவரம் என்பதை எடுத்துரைத்தேன் .

மற்றொரு சமயம் சிற்றுண்டி விடுதிச் சமையல் காரருக்கு, அவரது மனைவியின் பேறு காலச்செலவுக் கென்று ரூ. 75/= கொடுத்தேன். அது பற்றியும் விசாரித்தார். “என்னிடம் வேலை பார்ப்பவருக்கு என் கைப் பணத்தைக் கொடுக்க யாரைக் கேட்கவேண்டும். சிற்றுண்டி விடுதிக் கணக்குப் பற்று எழுதி இருக்கிறதா என்று பாருங்கள்” என்று சொன்னேன்.

நேர்மையாலருக்கு அவருடைய நெஞ்சில் சிறப்பான இடம் உண்டு. எந்தச்சூழ் நிலையில் யாரை முதல்வராக போட்டால் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்துப் பொறுக்கி எடுப்பார்!முதாவ்வர்களுக்கான பல த்தகுதிகளில் நேர்மையை முக்கிய மாக மதிப்பார். ஒரு சமயம் “கல்லூரி முதல்வருக்கு முக்கியமாக என்ன தகுதி இருக்கவண்டும் என்று நினைக்கிறீர்கள்? “ என்று என்னைக் கேட்டார். “நன்றாகக் கணக்குப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்”. என்று பதில் கூறினேன். “நேர்மையானவராக இருக்கவேண்ட்மையா” என்றார் அவர்.

அறக் கொடை நிறுவனம், கல்விக் கூடங்கள், விடுதி ஆகியவற்றின் வருவாயையும் பேணி, ஒவ்வொரு பைசாவும் பெரும் பயனைத் தரும் வகையில், சிக்கனமாகச் செலவிட்ட நிதித்துறைச் சூரர் தாளாளர்!



பேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,
வரலாற்றுத் துறை,
கா.மு.கல்லூரி.

powered by Blogger