கண்ணுக்குள் கண்ணாடி

நேற்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது கிடைத்த ஒரு தகவல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடல்லாமல் ஆனந்ததையும் அளித்தது. தடித்த கண்ணாடிகளை தவிர்க்க உதவும் ஒரு லேசர் சிகிச்சைபற்றிய தகவல் அது. லேசிக்(LASIK - Laser Assisted In-Situ Keratomileusis) எனப்படும் ஒருமுறை மூலம் லேசரை பாவித்து பார்வைக் கோளாரை சரி செய்யும் ஒரு வழி. இதை முதலில் அறிமுகம் செய்தவர் சிறீனிவாசன் என்கிற மைலாப்பூரைச் சேர்ந்த சென்னை வாசிதான் என்கிற தகவல்தான்என்னை அப்படி ஆச்சரியப் படுத்தியது. இந்த தகவலைத் தந்தவர் ஏதோ வழியே போகும் ஓர் ஆசாமி அல்ல. நேத்திராலயாவின் தலைவர்- பத்மபூ‡ன்...

யுனிகோடும் இயங்கு எழுத்துருவும்

இப்போது அனேகமாக எல்லா வலைத்தளங்களும் இயங்கு எழுத்துருக்களைப் பாவிப்பதில் நாட்டம் கொள்கின்றன. இரண்டு காரணங்கள். ஒன்று, தமிழ் எழுத்துரு இல்லாத கணினிகளும் தங்கள் பக்கங்களை காணச் செய்யலாம். இரண்டு, தங்கள் சொந்த எழுத்துக்களைக் கொண்டு(அது எம்மாதிரியான குறியேற்றமாக இருந்தாலும்) படிக்கச் செய்யலாம். தமிழில் குறியீட்டுத் தரம் இன்னும் ஒரு கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் நாளுக்கொன்றாக துவக்கப் படும் இணைய சஞ்சிகைகள் இயங்கு எழுத்துருக்களை பாவிக்க வேண்டிருக்கிறது. இல்லையென்றால் பத்திரிக்கைக் கொன்றாக எழுத்துருக்களை நம் கணினியில் நிரப்ப வேண்டியிருக்கும்....

இன்று அக்டோபர் 2

இன்று காந்தி பிறந்த நாள். தலைவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக காந்தி சிலைக்கு மாலையணிவிப்பதும் மலர் வளையம் வைப்பதுமாக தொலைக் காட்சிகளில் காட்டப் பட்டனர். சிலரைப் பார்க்கும்போது உள்ளூர சிரிப்பு வந்தது. இவர்களுக்கும் காந்திக்கும் என்ன தொடர்பு? காலத்தின் கோலம் இவர்களை இப்படி ஆக்கி வைத்திருக்கிறது. நிச்சமாக காந்திஜி ஒரு தீர்க்கதரிசிதான். அவருக்குப் பின்னால் வரப்போகும் தலைவர்களைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்த எவ்வளவு எளிமையான வழியை குரங்கு பொம்மைகள் வழியாக நமக்கு சொல்லித்தந்திருக்கிறார். இன்றைய அரசியல்வாதிகள் எப்படி "நேர்த்தியாக" காந்தீய வழியைப் பின்பற்றிகின்றனர்?...

எழுத்துச் சீர்மையும் யுனிகோடும்

எழுத்துச் சீர்மை பற்றி அவ்வப்போது பேசப் பட்டு வந்தாலும் கணினி பயன்பாட்டிற்கு வந்த பின் குறிப்பாக யுனிகோடு பயன்பாட்டிற்கு வந்த பின் அதிகம் பேசப்படுகிறது. காரணங்கள் இரண்டு. ஒன்று எழுத்துச் சீர்மை பற்றி கூறப்படுபவற்றில் சில இதில் அடங்கி இருக்கின்றன. இரண்டு யுனிகோடில் ஏற்படப்போகும் மற்றம் நிலையானது. எழுத்து மாற்றங்கள் காலப்போக்கில் நிகழ்ந்து வந்தாலும் "னை", "லை" மாற்றங்கள் நாமறிந்து சமீப காலத்தில் வந்தவை. பெரியார் அறிமுகப் படுத்திய இந்த மாற்றம் அரசால் அங்கீகரிப்பட்டு மெல்ல எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்போது சொல்லப்படும் உகர ஊகார மாற்றங்களும்...

powered by Blogger