யுனிகோடும் இயங்கு எழுத்துருவும்
இப்போது அனேகமாக எல்லா வலைத்தளங்களும் இயங்கு எழுத்துருக்களைப் பாவிப்பதில் நாட்டம் கொள்கின்றன. இரண்டு காரணங்கள். ஒன்று, தமிழ் எழுத்துரு இல்லாத கணினிகளும் தங்கள் பக்கங்களை காணச் செய்யலாம். இரண்டு, தங்கள் சொந்த எழுத்துக்களைக் கொண்டு(அது எம்மாதிரியான குறியேற்றமாக இருந்தாலும்) படிக்கச் செய்யலாம்.
தமிழில் குறியீட்டுத் தரம் இன்னும் ஒரு கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில் நாளுக்கொன்றாக துவக்கப் படும் இணைய சஞ்சிகைகள் இயங்கு எழுத்துருக்களை பாவிக்க வேண்டிருக்கிறது. இல்லையென்றால் பத்திரிக்கைக் கொன்றாக எழுத்துருக்களை நம் கணினியில் நிரப்ப வேண்டியிருக்கும். இயங்கு எழுத்துருக்களுக்கு வித்திட்ட நெட்ஸ்கேப் வேறு இடையில் எகிறிக்கொண்டது.
வலைத்தளங்களை அமைப்போரும் சரி, அல்லது வலைத்தள சஞ்சிகளை அளிப்போரும் சரி, இணையத்தில் தங்கள் ஆக்கங்கள் படிக்கப்பட்டால் போதும் என்று மட்டுமே எண்ணுகின்றனர். ஆனால் அவை பிறருடன் பரிமாறிக் கொள்ளுமாறு அமைவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் சில ஆக்கங்களை அச்சு எடுக்க வேண்டுமானாலும் சிக்கல்தான். இந்த நிலை மாறவேண்டுமானால் யுனிகோடே சரணம். யுனிகோடு தட்டச்சு செய்ய இயலுவதால் இப்போது பலதரப்பட்ட கணினி பாவிப்பாளரிடையே "ஒப்பன் ஆ(ஓ)பீஸ்" ஓர் எழுச்சியைக் கொடுத்திருக்கிறது
யுனிகோடு செம்மையாக அமைய வேண்டும் என்ற கருத்தில் பேதமில்லை. ஆனால் மிகக் காலம் தாழ்ந்த எழுச்சியென்றே தோன்றுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் சோதனையாக தமிழ் யுனிகோடை வலையில் ஏற்றியபோது ஏதோ இருக்கட்டும் என்று விட்டுவிட்டோமா அல்லது அதில் மாற்றம் வரவேண்டும் என்பதை எல்லா பயனரும் அறியும் வண்ணம் விவாதிக்கப்படவில்லையா என்று தெரியவில்லை.
இனி பெரிதாக யுனிகோடில் மாற்றம் வராது என்பது மெல்ல உறுதியாகி வருவதால் யுனிகோடிற்கு மாறுவது தவிற்க இயலாதது. அறிந்தோ அறியாமலோ எல்லோரும் யுனிகோடை பாவிக்கும் காலம் வரப்போகிறது. இப்போது புதிதாக தொடங்கும் வலைத்
தளங்கள் யுனிகோடில் அமைகின்றன. இயங்கு எழுத்துருக்களுக்கு மவுசு குறையப் போகிறது. வேண்டுமானால் சில சித்திர(special charecters) எழுத்துக்களை மட்டுமே தோன்றச் செய்ய அது பயன்படலாம்.
அதிரை எச்பிராஸ் என்ற பேரில் கலந்துரையாடல் என்கிற தலைப்பில் தனிநபர் மட்டும் குடும்ப விசயங்களை பேசி அல்லது அதை ஆதரித்து இந்த இணைய தளத்தை நடத்திவரும் 5பேர் குழு இந்த கேடுகெட்ட செயலை நிறுத்தவேண்டும் இல்லை தங்களை யார் என்று சமூதாயத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும்.திரை மறைவில் இருந்து கொண்டு மஞ்சள் பத்திரிகை போல் நடத்தும் இவர்கள் இணைய தளத்துடன் இணைப்பு வைத்துள்ள சிறந்த இணைய தளங்கள் எல்லாம் தங்களது லிங்க்களை உடனே நீக்கும் படி கேட்டு கொள்கிறேன்.இல்லை உங்கள் தளங்களின் பேரும் கெட்டுவிடும்.