கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு
வா.. வின் ஓவியம்

உ(த்த)மர்தம்பி

ஓரிரண்டு வயதில் அம்மாவை இழுத்து வந்து,
அமர வைத்துப் பால் உண்டாய்!
ஈறைந்து வயதில் அண்ணனைக் கூட்டி வந்து
உன் உணர்வுக்குத் தீனி போட்டாய்!
ஆறைந்து வயதுக்குப் பின், அறிவின்
ஊற்றாய்த் திகழ்ந் திருந்தாய்!
குரல் வெளி வரும்போதே உன்னிடமிருந்து
குறளும் சேர்ந்தே வந்தது!
ஆறாவதில் அமர்ந்து கொண்டு, ஏழாவதின்
அறிவியல் பாடம் கற்றாய்!
படிப்பில் மார்க் கோணிய பின்னரும்
மார்க்கோனியை முந்த முயன்றாய்!
உயிரியலைக் கற்று உணர்வுக்குப்
புத்துயிர் அளித்து நின்றாய்!
சர்க்கரையாகப் பிறருடன் பேசிய நீ,
சர்க்கரையால் கரைந்து போனாய்!
தென்றலாய்த் தவழ்ந்து வந்த நீ,
இனிப்புப் புயலால் அலைக்கழிந்தாய்!
தெரிந்திருந்தும் தேனீயை நீ
ஏனப்பா தேர்ந் தெடுத்தாய்?
தகாதோரை தேனீயாய்க் கொட்டினாய்!
தமிழ்மீது ஏன் தேனைக் கொட்டினாய்?
தொட்டிலி லிருந்து நெட்டு வரை
என்னுடன் வாழ்ந் திருந்தாய்!
என்னைத் தனி மரமாய் விட்டுவிட்டு
ஏன் தம்பி நீ மட்டும் மறைந்து போனாய்?


உமர்தம்பிஅண்ணன்

0 Response to " "

powered by Blogger